ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி ஒவ்வொரு வருடமும் INSTINCTS என்ற பெயரில் மார்ச் மாதம் மாபெரும் கலைத் திருவிழாவை நடத்தி வருகிறது. இதில் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருடமும் சாரல் தமிழ் மன்றம் பல்வேறு தமிழ்ப் பாரம்பரிய நிகழ்ச்சிகளையும், தமிழ் வளர்க்கும் நிகழ்ச்சிகளையும் மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறது. போட்டிகள் மட்டுமன்று, பெரும் பேச்சாளர்களும், தமிழ் சார்ந்த அறிஞர்களும் வருகைத் தந்து, தங்களின் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். இந்த வருடமும், மார்ச் 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் INSTINCTS கலைத்திருவிழாவில் சாரல் தமிழ் மன்றம் சார்பாக பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இவ்விழாவை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறோம்
சாரல்
மோதிப்பார்
சிறந்த பேச்சாளராக விருப்பமா பட்டிமன்றத்தில் சிறப்பாக பேச ஆசையா ??
கவலை வேண்டாம் !
மோதிப்பாரில் பங்கெடுத்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுங்கள் !
போட்டியின் வடிவம்:
–> முதல் சுற்று – பேச்சுப் போட்டி (போட்டிக்கான தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன).
–>முதல் சுற்றில் வெற்றி பெரும் இருவர் அல்லது மூவர் பட்டிமன்றப் புகழ் திரு. இராஜா அவர்களின் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றத்தில் பேசுவார்கள்.
பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் :
1. மின் தட்டுப்பாட்டை நீக்குவதில் அணு ஆற்றலின் பங்கு.
2. கல்வி நிறுவனங்களின் ஒழுக்கத்தில் அரசாங்கத்தின் பங்கு.
3. வறுமையை அகற்றுவதில் மாணவர்களின் பங்கு.
4. இளைஞர்களின் வளர்ச்சியில் திரைப்படங்களின் பங்கு.
விதிமுறைகள்:
1. இது தனி நபர் போட்டி.
2. பேசுவதற்கான நேரம் – 5 நிமிடங்கள்.
3. பிறமொழிச் சொற்கள் உபயோகிக்கக் கூடாது.
4. நடுவர்களின் தீர்ப்பு இறுதியானது.
பேச்சுப் போட்டி : இரண்டாம் நாள்(மார்ச் 9), காலை 9.30 மணி, Central Seminar Hall
பட்டிமன்றம் : மூன்றாம் நாள்(மார்ச் 10), காலை 9.00 மணி, கல்லூரி கேளரங்கம்(Main Auditorium)
Facebook பக்கம் – www.facebook.com/saaral
எழுதுகோல்
கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு – வைரமுத்து
கவிதை புனைவதில், கட்டுரை இயற்றுவதில் வல்லவரா நீங்கள்?? உங்களுக்கான களம் தான் இது. உங்களுக்குள் இருக்கும் வைரமுத்துவை சுஜாதாவை ஜெயகாந்தனை வெளி கொண்டுவரும் ஒரு சிறிய முயற்சி. உங்கள் கற்பனை குதிரைகளை தட்டி விட ஓர் சிறந்த தருணம்.
விதிமுறைகள் :
- இது தனி நபர் போட்டி.
- கவிதை மற்றும் கட்டுரையின் அதிகபட்ச அளவு போட்டியன்று அறிவிக்கப்படும்.
- போட்டிக்கான தலைப்புகள் போட்டியன்று தரப்படும்.
- போட்டியில் பங்கேற்பவர்கள் தங்கள் கற்பனைகளை ஒரு மணி நேரத்திற்குள், கொடுக்கப்படும் தாளில் எழுதி முடிக்க வேண்டும்.
- கவிதை மற்றும் கட்டுரையில் பிறமொழிச் சொற்கள் உபயோகிக்கக் கூடாது.
- நடுவர்களின் தீர்ப்பு இறுதியானது.
போட்டி நடைபெறும் நாள் : மார்ச் 9, காலை 10 மணி
இடம் : Mechanical Department Drawing Hall
Facebook பக்கம் – www.facebook.com/saaral
சகலகலா வல்லவன்
“அது இது எது” ,” ஒரு வார்த்தை ஒரு லட்சம்” போன்ற நிகழ்சிகளில் பங்கேற்க முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளவரா நீங்கள்??? உங்களுக்காக இதோ பிரபல தொகுப்பாளர் தொகுத்து வழங்க அத்தனையும் ஒரே மேடையில் . இதில் நீங்கள் பங்கேற்க தேவையான அடிப்படை தகுதி : அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல boss. இந்த போட்டியை “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தைச் சேர்ந்தவர்கள் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.
விதிமுறைகள்:
- தகுதிச் சுற்று வினா விடை வடிவில் இருக்கும்.
- தகுதிச் சுற்றில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் அணிகள் சகலகலா வல்லவன் போட்டியில் விளையாடுவர்.
- ஒரு அணியில் இருவர் மட்டுமே.
- போட்டி ஐந்து அல்லது ஆறு சுற்றுகள் கொண்டதாக இருக்கும்.
- நடுவர்களின் தீர்ப்பு இறுதியானது.
- போட்டியில் விளையாடுபவர்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் பரிசுகள் உண்டு.
போட்டி நடைபெறும் நாள் : மார்ச் 10, பிற்பகல் 1 மணி
இடம் : கல்லூரி கேளரங்கம்(Main Auditorium)
Facebook பக்கம் – www.facebook.com/saaral
பாடு நிலாவே
“ஆயிரம் நிலவே வா” என்று SPBயைப் போல பாட வேண்டும் என்று அவசியம் இல்லை . “Why this kolaveri” பாடலை எழுதியவர் தனுஷ் என்று தெரிந்திருந்தால் போதும் . பாட்டு போட்டிகளில் முதல் பரிசு பெற்றிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சிறந்த குரல் வளம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவசியம் இல்லை. சிறு வயதில் பாட்டுக்கு பாட்டு விளையாடி இருந்தால் போதும். இப்போட்டியில் நீங்கள் பங்கேற்க செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். நீங்க வந்தா மட்டும் போதும் .
விதிமுறைகள்:
- தகுதிச் சுற்று வினா விடை வடிவில் இருக்கும்.
- தகுதிச் சுற்றில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் அணிகள் பாடு நிலாவே போட்டியில் விளையாடுவர்.
- இது பாட்டுக்கு பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டுப் போட்டி.
- ஒரு அணியில் இருவர் மட்டுமே.
- போட்டி ஐந்து அல்லது ஆறு சுற்றுகள் கொண்டதாக இருக்கும்.
- நடுவர்களின் தீர்ப்பு இறுதியானது.
போட்டி நடைபெறும் நாள் : மார்ச் 9, பிற்பகல் 1 மணி
இடம் : CSE Seminar Hall
Facebook பக்கம் – www.facebook.com/saaral
தமிழிசை
இசையில் மிகுந்த ஆர்வம் உடையவரா நீங்கள்? தமிழில் சரளமாக பாடக்கூடியவரா நீங்கள்?
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஓர் அறிய வாய்ப்பு!!!
திரைப்படப் பாடல் இல்லாமல் உங்கள் சொந்த பாடலோ அல்லது நாட்டுப்புறப் பாடலோ இசை நயத்துடன் பாடி பரிசுகளை வென்று செல்லுங்கள்.
விதிமுறைகள்:
1. எந்த தலைப்பில் வேண்டுமானாலும் பாடலாம்.
2. சொந்த படைப்பாகவோ அல்லது நாட்டுப்புறப் பாடலாகவோ இருக்கலாம்.
3. இசை நயத்துடன் பாட வேண்டும்.
4. திரைப்படப் பாடல்கள் கூடாது.
5. தமிழ் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும்.
6. பாடுவதர்கான அதிகபட்ச நேரம் – 10 நிமிடங்கள்.
7. நடுவர்கள் தீர்ப்பு இறுதியானது.
Facebook பக்கம் - www.facebook.com/saaral
தொடர்பு கொள்ள
நித்தியானந்த் – 9003559297
அருண் பிரகாஷ் – 9940127190
பரத் ராம் – 9952955920
Facebook இல் சாரல்
Facebook இல் சாரல் தமிழ் மன்றத்தின் பக்கத்தை இந்த முகவரியில் பாருங்கள்…
சிறந்த புகைப்படங்கள், கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த பல்வேறு கருத்துகளையும் Facebook பக்கத்தில் பகிர்ந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் !